/* */

குற்ற குறிப்பாணையை (17பி) ரத்து செய்ய கோரி வருவாய் துறை சங்கம் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு 70க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மனு அளிக்க காத்திருந்தனர்.

HIGHLIGHTS

குற்ற குறிப்பாணையை (17பி) ரத்து செய்ய கோரி  வருவாய் துறை சங்கம் காத்திருப்பு போராட்டம்
X

வருவாய்த்துறை அலுவலர்களின் குற்ற குறிப்பானையை ரத்து செய்ய கோரி வாசலில் அமர்ந்திருக்கும் வருவாய் துறை ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரமற்ற அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்குவதாக தமிழக முதல்வரிடம் கிராமசபை கூட்டத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் உள்ள அரிசி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் தரமற்ற அரிசி விநியோகம் செய்த கூட்டுறவுத்துறை ஊழியர்கள் 11 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வாலாஜாபாத் வட்ட வழங்கல் அலுவலருக்கு குற்ற குறிப்பானை எனும் 17பி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இதேபோல் காஞ்சிபுரம் துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் மருத்துவ விடுப்பில் சென்ற தெற்கு மாவட்ட நிர்வாகத்தால் 17பி வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் தண்டிக்கப்படுவதும் இதனால் அதிக அளவில் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி இதனை ரத்து செய்யவும் பரிந்துரைக்க மாவட்ட ஆட்சியரை சந்திக்க வருவாய்த்துறை சங்கத்தினர் முயற்சி செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் முறையற்ற பதிவுகளை தெரிவித்ததாகக் கூறபடுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த வருத்தமடைந்த வருவாய் அலுவலர் ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த போது குற்ற குறிப்பாணை ரத்து நடவடிக்கை எடுப்பேன் என கூறததால் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கூட்டுறவுத் துறையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளருக்கும் மீண்டும் பணி வழங்க பட்ட நிலையில் வருவாய்துறை எனக்கு மட்டும் ரத்து செய்யப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. கூட்டுறவு துறைக்கு ஒரு நியதியா ? வருவாய்த் துறைக்கு ஒரு நீதியா ? என கேட்கும் அளவிற்கு மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது என கண்டனம் எழுப்புகின்றனர்.

Updated On: 5 May 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  4. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  5. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  7. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  9. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்