/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வீடுகளுக்கு தினசரி குடிநீர் வழங்க திட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கப்படுவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வீடுகளுக்கு தினசரி குடிநீர் வழங்க திட்டம்
X

 கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிதாக பதவியேற்ற மாநகராட்சி மேயர் பதவி ஏற்புக்கு பின் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் முறையாக வழங்கப்படும் எனவும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என உறுதி அளித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு பல்வேறு ஆற்றுப் படுகைகளில் இருந்து நீரேற்று நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வழியில் பல பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக நீர் சேதாரம் ஆகி குறைந்தளவே நீரேற்று நிலையத்திற்கு வருவதை கண்டறிந்த மாநகராட்சி மேயர் பகுதிகளை உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலைய பகுதியினை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் மாநகராட்சி மேயர் மாகலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனம்பாக்கம் நீரேற்று நிலையத்தில் இருந்து ஓரிக்கை நீரேற்று நிலையத்துக்கு சென்று அங்கிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும் குடிநீர் குழாய்களை பராமரிப்பு செய்து குடிநீர் வீணாகாமல் சென்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மக்களுக்கும் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன் பின் பேசிய சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் குழாய்கள் பழுது கண்டறியப்பட்டு அதை சரி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் சேதாரம் இன்றி நீரேற்று நிலையங்கள் சேமிக்கப்பட்டு விரைவில் நாள்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சினை இன்றி மாநகராட்சி செயல்பட அனைத்து உழியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ், சங்கர் , கார்த்திக், பூங்கொடி தசரதன் நிர்மலா மற்றும் திமுக நிர்வாகிகள் யுவராஜ் , தசரதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...