காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

காஞ்சிபுரத்தில்  தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த போது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

ஐந்து தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் மரணம் அடைந்தது குறித்து நேற்று பள்ளி வளாகம் முன்பு பல ஆயிரம் பேர் திரண்டு பள்ளி முழுவதும் சூறையாடி பேருந்துகளுக்கு தீ வைத்தும் , பள்ளி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் தொடர்ந்து பள்ளியை நடத்த இயலாத நிலையும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் சார்பில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்தது.

இதனை சற்றும் எதிர்பாராத மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனரகம் அரசிடம் ஆலோசிக்காமல் எந்த முன்னறிவிப்பின்றி பள்ளி விடுமுறை விடக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 72 தனியார் பள்ளியில் உள்ள ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.


Tags

Next Story