/* */

பா.ம.க. கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

பா.ம.க. கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

பா.ம.க. கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
X

பா.ம.க.  கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பா.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பெ.மகேஷ் குமார் தலைமையில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழுவின் தலைவர் ஏ.கே.மூர்த்தி,முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி கமலாம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசும்போது

பா.ம.க. தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சி எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை ஆளும் கட்சியாக வர முடியவில்லை.இரு கட்சிகளே மாறி,மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன.இதற்கு காரணம் மக்கள் பா.ம.க. மீது நல்ல மதிப்பு வைத்திருந்தாலும் தேர்தலின் போது பெரும்பாலான வாக்காளர்கள் பணத்துக்காக மாறி விடுகிறார்கள்.

பா.ம.க. ஆளும் கட்சியாக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிற நேரம் வந்து விட்டது.எனவே கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுடன் இணைந்து கிராமங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.வாரத்துக்கு இரு முறையோ அல்லது ஒரு முறையோ மக்களின் உள்ளூர் பிரச்சினைகளுக்காக அந்தந்த பகுதிகளில் போராட்டங்களை நடத்த வேண்டும்.

பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.பல தொழிற்சாலைகளில் வட இந்தியர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதில் 80 சதவிகிதம் தமிழர்களாக இருக்க வேண்டும்.

தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்றவைகளுக்காக கட்சித் தொண்டர்கள்,நிர்வாகிகள் போராட்டங்களில் ஈடுபடும் போது நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம்.

சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சியில் பதவிகளில் இருப்பவர்களுக்கு இடமில்லை.சேவை செய்யவும்,மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவுமே கட்சிகளில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.எனவே நிர்வாகிகள்,தொண்டர்கள் மீது புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 16 April 2022 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்