/* */

பூங்காவில் சிறுவர்களுடன் வரும் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் மட்டும் அனுமதி

பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள் விளையாட ஏராளமான பொழுதுபோக்கு விளையாட்டு சாதனைகள் பொருத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பூங்காவில் சிறுவர்களுடன் வரும் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் மட்டும் அனுமதி
X

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, அதன் நினைவாக காஞ்சிபுரத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த திமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டில் இரண்டு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் என அமைக்கப்பட்டு பேரறிஞர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா கட்டப்பட்டது.

அதனை, அன்றைய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார்.

கடந்த பத்து வருடங்களில் பூங்கா சரியான முறையில் பராமரிக்கப்படாததால் அதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் மற்றும் நீர்வீழ்ச்சி நடைபாதை உள்ளிட்டவை சிதிலமடைந்தாக பத்திரிக்கை செய்தி வெளியானது தொடர்ந்து மீண்டும் திமுக ஆட்சி பதவி ஏற்றதும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வுக்குழுவினர் பூங்காவை ஆய்வு செய்து உடனடியாக புணரமைக்க உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பூங்கா நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இருக்கைகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பேரறிஞர் அண்ணாவின் புதிய சிலை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு முக்கிய அம்சமாக இப்பூங்கா விளங்கியது.

கடந்தாண்டு இந்த பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் நிலை காவல்துறை அப்பூங்காவில் பகுதியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பலை கைது செய்தனர்.

இதன் பின் பூங்கா முழுவதும் மாநகராட்சி சிசிடிவி கேமராக்களை இணைத்து கண்காணிக்க தொடங்கியது. மேலும் ரயில்வே சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் விளையாடி வந்த சிறுமியை அவரது உறவினர் ஒருவர் பாலியல் துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேரறிஞர் நினைவு நூற்றாண்டு பூங்காவில் கனவில் சிறுமிகளும் பெண்களும் மூத்த குடிமக்களும் வருவதை அறிந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அவர்களுக்கு பாதுகாப்பின் நலன் கருதி அதிரடி முடிவு மேற்கொண்டு பூங்கா காலை 5 மணி முதல் 8 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்து இருக்கும் என அறிவித்தது.

அதனை அடுத்து தற்போது பூங்காவின் நுழைவு வாயில் மாநகராட்சி ஆணையாளர் சார்பில் ஓர் அதிரடி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதியும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, பூங்காவில் சிறுவர்கள் உடன் வரும் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் .

மேலும் தவறும் பட்சத்தில் காவல்துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக ஆணையர் சார்பில் விளம்பர படுத்தபட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு காவல்துறை சார்பிலும் வரவேற்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Oct 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்