/* */

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் அமாவாசை பூஜைக்கு தடை

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சோமவார அமாவாசை பூஜை செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் அமாவாசை பூஜைக்கு தடை
X

கோயில் வாசல் முன்பு வண்ணப் பொடிகளால் கோலமிட்டு பால் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்து அமாவாசையை பூஜை செய்த பெண்கள்.

திங்கட்கிழமைளில் வரும் அமாவாசை தினத்தை சோமவார அமாவாசை ‌‌‌‌என அழைக்கபடுகிறது. இதுமட்டுமில்லாமல் திங்கட்கிழமை சந்திரன் ஆதிக்கம் கொள்ளுவதால் அந்நாளில் தீபமேற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

மேலும் இந்த நாளில் அரசமரம் வலம் வருவது உடலுக்கு நன்மை பயக்கும் மற்றும் மங்கல நிகழ்வுகள் நிகழும் என்பதால் அதிகாலையில் குறிப்பாக பெண்கள் அரச மரத்தை வலம் வருவர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் ஆலயத்தில் திருக்குளம் அருகே அரசமரத்தின் கீழ் சப்த கன்னிகள் அமைந்துள்ளது.

சோமவார அமாவாசை தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர். தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்களை தவிர்க கோயில் நடை சாத்தப்படுகிறது.

அவ்வகையில் இன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில் சோமவார அமாவாசை விழா கொண்டாடவும், பொதுமக்கள் தரிசனத்திற்கு தடைவதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள் கோயில் வாசல் முன்பு வண்ணப் பொடிகளால் கோலமிட்டு பால் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்து அமாவாசையை பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

Updated On: 6 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!