/* */

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவர் கைது

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவர் கைது
X

பைல் படம்

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு 4 மற்றும் இருசக்கர ரோந்து வாகனம் மூலம் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சின்னையன் சத்திரம் பகுதியில் சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் , ஜெகன் ஆகியோர் சர்வீஸ் சாலையில் நின்றிருந்த லாரி ஓட்டுநர் இடம் செல்போனை பறித்து சென்றதாக வந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து காவல் வாகனங்களில் காவலர்களை கண்டதும் தப்பி ஓடிய போது அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சந்தேகப்படும் வாலிபர்கள் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 14 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்