/* */

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பெயரை கூறி இணைய மோசடிக்கு முயன்றவர் கைது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் எனக் கூறி பணம் கேட்டு பெற முயன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பெயரை கூறி இணைய மோசடிக்கு முயன்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தான பாரதி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் எனக் கூறி பணம் கேட்டு பெற முயன்ற வழக்கில் புதுக்கோட்டையை சேர்ந்த சந்தானபாரதி என்பவரை காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வருகிறது பிரபல பட்டு ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம். இதன் உரிமையாளரான எஸ்.கே.பி. கோபிநாத் என்பவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசுவதாகவும் சற்று இருங்கள் எனக் கூறி நிலையில் வேறு ஒரு நபர் தான் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உதவியாளர் எனவும், வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் அவசர தேவைக்கு தேவைப்படுவதாக கூறி வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத் இது குறித்து புகார் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த நிலையில் இதனை சைபர் க்ரைம் காவல் துறைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. சுதாகர் உத்தரவிட்டு விசாரணை மேற்கொள்ள கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் ராஜகோபால் , சதீஷ் , ஆல்பர்ட் ஜான் ஆசைத்தம்பி குழுவினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி இச்செய்தியை ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பண உதவி கேட்டது உறுதி செய்யப்பட்டதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரிய வந்த நிலையில், மீண்டும் அவரை இவ்வழக்கில் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் தஞ்சாவூர் சிறையில் அடைத்தனர்.

சந்தானம் என்கிற சந்தானபாரதி இதே போல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இணையதள மோசடி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கல்லூரிகள் தொழிற்சாலைகள் , வங்கிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு அளித்து வந்த நிலையில் ஒருவர் இது குறித்து அறிந்து புகார் அளித்ததின் பேரில் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டது போல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 24 March 2023 12:56 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  6. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  7. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  8. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  9. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்