தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 முதல் 13ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32 சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம்.
சென்னை 94.48%
செங்கல்பட்டு 94.71%
காஞ்சிபுரம் 92.28%
திருவள்ளூர் 91.32%
கடலூர் 94.36%
விழுப்புரம் 93.17%
திருவண்ணாமலை 90.47%
அரியலூர் 97.25%
பெரம்பலூர் 96.44%
கள்ளக்குறிச்சி 92.91%
திருவாரூர் 93.08%
தஞ்சாவூர் 93.46%
மயிலாடுதுறை 92.38%
நாகப்பட்டினம் 91.19%
திருப்பத்தூர் 92.34%
வேலூர் 92.53%
திருச்சி 95.74%
கரூர் 95.90%
புதுக்கோட்டை 93.79%
தர்மபுரி 93.55%
கிருஷ்ணகிரி 91.87%
சேலம் 94.60%
ஊட்டி 94.27%
திருநெல்வேலி 96.44%
தென்காசி 96.07%
ராமநாதபுரம் 94.89%
தேனி 94.65%
மதுரை 95.19%
திண்டுக்கல் 95.40%
கோயம்புத்தூர் 96.97%
திருப்பூர் 97.45%
தூத்துக்குடி 96.39%
கன்னியாகுமரி 95.72%
விருதுநகர் 96.64%
நாமக்கல் 93.49%
சிவகங்கை 97.42%
ஈரோடு 97.42%
ராணிப்பேட்டை 92.28%
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu