கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
காஞ்சிபுரத்தில் பெய்த மழை
வழக்கமாக கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் சொல்லவே வேண்டாம், வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும்.
நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் 28-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வெப்ப காற்று வீசி வந்த நிலையில் மேலும் வெப்பம் அதிகமாகி கத்திரி வெயில் தொடங்கியதும் பொதுமக்கள் முதியோர் குழந்தைகள் என வெயிலில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கோடை மழை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தவாடி அகரம், வெள்ளை கேட், திம்ம சமுத்திரம் , ஒலி முகமது பேட்டை, சிறு காவிரிப்பாக்கம் கீழம்பி போன்ற இடங்களில் கன மழை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் காஞ்சிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெப்ப அனல் காற்றில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu