/* */

இந்துக்களுக்கு எதிரானது திமுக அல்ல என்றார் மக்களவை திமுக எம்பி- டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிப்பு

HIGHLIGHTS

இந்துக்களுக்கு எதிரானது திமுக அல்ல என்றார் மக்களவை திமுக எம்பி- டி.ஆர்.பாலு
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து  டி.ஆர்.பாலு வாக்கு சேகரித்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு இன்று வாக்கு சேகரித்தார்.

கூட்டத்தில் பேசிய டி .ஆர். பாலு , திமுக கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கடந்த ஒன்பது மாத கால ஆட்சிச் சிறப்புகளை கூறி வாக்குக் கேட்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் வாய்ப்பு கிடைக்காத உனக்கு விரைவில் பல்வேறு துறைகளில் வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் , விரோதங்களை கைவிட்டு திமுகவின் வெற்றி ஒன்றே குறிக்கோளாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காஞ்சிபுரம் மிகச் சிறந்த ஆன்மீக பூமி எனவும் , இந்து மக்களுக்கு எதிரான கட்சி திமுக என பலர் விமர்சித்து வரும் நிலையில், திமுக அனைத்து மதத்தினருக்கும் தேவையான அனைத்தையும் செய்து வருவதாகும் , இந்து கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நாள்தோறும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் நின்றுபோன கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுவதும் , கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு இந்து சமய அறநிலைத்துறைக்கே ஒப்படைத்தது ஒன்றே திமுக இந்து விரோத கட்சி அல்ல என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சி வி எம் பி. எழிலரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?