/* */

காஞ்சிபுரத்தில் கொரோனா நிவாரண நிதி 97 சதவீதம் பேர் பெற்றுள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் 97 சதவீதம் பேர் பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம்தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கொரோனா நிவாரண நிதி 97 சதவீதம் பேர் பெற்றுள்ளனர்
X

ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி பெரும் மூதாட்டி.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது திமுக சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு. க .ஸ்டாலின் முதல் தவணையாக ரூபாய் 2000 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நிவாரண தொகையை அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் ,ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் ஆகிய ஐந்து பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்து 60 ஆயிரத்து 252 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 889 பேர் ரூபாய், நிவாரண தொகையை அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்றுள்ளனனர். இது 97 சதவீதம் அட்டைக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் , மீதமுள்ள 12 ஆயிரத்து 363 பேருக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்