தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம் காட்டிய மேககூட்டங்கள்.
தேனி மாவட்டத்தை வெயில் வாட்டி எடுத்த நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் மிகவும் குறைந்து போனது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் பரிதவித்தனர். வீட்டை விட்டு வெளியில் செல்வதே மிகவும் சிக்கல் என்ற நிலை தான் காணப்பட்டது. அனல் காற்று காரணமாக வீட்டிற்குள்ளும் இருக்க முடியவில்லை.
இந்த சூழலில் கடந்த 6 நாட்கள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வீரபாண்டி திருவிழா திடலிலும் மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவினை பார்க்கலாம்.
ஆண்டிபட்டியில் 49.6 மி.மீ., வீரபாண்டியில் 2.4 மி.மீ., பெரியகுளத்தில் 78 மி.மீ., மஞ்சளாறு அணையில் 2 மி.மீ., சோத்துப்பாறையில் 16 மி.மீ., வைகை அணையில் 16.8 மி.மீ., போடியில் 9.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.6 மி.மீ., பெரியாறு அணையில் 2 மி.மீ., சண்முகாநதியில் 6.8 மி.மீ., மழை பதிவானது.
வீரபாண்டியை சுற்றிலும் மழை பதிவான நிலையில், வீரபாண்டியில் துாறலுடன் வானம் வர்ணலாஜம் காட்டியது. நாலாபுறமும் வானில் விதவிதமான மேக கூட்டங்கள், சூரிய கதிர்களுடன் பல்வேறு வண்ணங்களில் காட்சியளித்தது. திறந்தவெளி திடல், பல லட்சம் பேர் கூடியிருந்த கூட்டம், சில்லென்ற காற்று, லேசாக துாறிய மழை, வர்ணஜாலம் காட்டி வானம் என வீரபாண்டி களைகட்டி பக்தர்களின் உற்காத்தை அதிகரித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu