/* */

வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நேரில் ஆய்வு..

காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நேரில் ஆய்வு..
X

வேகவதி ஆற்றை பார்வையிட்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்.

வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து, மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வேகவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் குடியிருப்பு பகுதியிலும் நீர் சூழ்ந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முருகன் குடியிருப்பு பகுதியில் உள்ள தாட்டித்தோப்பு தரைப்பாலம் ஏற்கெனவே சேதமடைந்து இருந்த நிலையில், தற்போது, பெய்த கனமழையினாலும், வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மேலும் சேதமைடந்தது.

இதனால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதுமட்டுமின்றி குடியிருப்புகளில் மழை வெள்ள நீர் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தாட்டித்தோப்பு தரைப்பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் செல்லாத வகையில், தரைபாலத்தின் ஒரு பகுதியை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டு மழை வெள்ள நீர் பெருமளவில் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதனால், குடியிருப்புகளில் நீர் செல்வதைத் தவிர்க்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி புயல் மழை பாதிப்புகளை எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காஞ்சிபுரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் பெருமளவு பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.

வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு மூன்று இடங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந்த இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடையக்கூடாது, அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் தூர்வாரப்பட்டு அப்புறப்படுத்தி நீர் வளங்கள் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் செல்லாத வகையில் தடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, முருகன் பட்டு கூட்டுறவு சங்கம், வரதராஜபுரம் கூட்டுறவு சங்கங்கள், குயியிருக்கக்கூடிய முருகன் குடியிருப்பு பகுதியில் உள்ள தாட்டித்தோப்பு தரைப்பாலம் ஏற்கெனவே சேதம் அடைந்தது. தற்போது, வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளப்பெருக்கால் மேலும்,சேதமடைந்து குடியிருப்புக்குள் நீர் செல்லும் சூழல் ஏற்பட்டது.இதனைத் தடுக்கும் வகையில் தாட்டித்தோப்பு தரைப்பாலத்தை நீர் தடையின்றி செல்லும் வகையில் அப்புறப்படுத்தி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மூன்று நாட்கள் கனமழை இருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்ந்து வழங்கப்பட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எழிலரசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

அப்போது, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 12 Dec 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி