/* */

காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.. ஆட்சியர், எம்.பி. பங்கேற்பு...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செல்வம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.. ஆட்சியர், எம்.பி. பங்கேற்பு...
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பங்கேற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது. விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்டைக்கூத்து கலைஞர்கள் மேளதாளம் முழங்க கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் கிராமத்தினர் வரவேற்றனர்.


அதனை தொடர்ந்து ஆட்சியர் ஆர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட கோல போட்டிகளை ஆய்வு செய்தார். இதில் மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலங்களும் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட கோலங்களும் இடம்பெற்று இருந்தது. 15-க்கும் மேற்பட்ட மகளிர்கள் புது பானையை அலங்கரித்து பச்சரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாராக வைத்திருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் பொங்கல் நிகழ்வினை தொடக்கி வைத்தார்.

பொங்கல் பொங்கி வரும் நிலையில் ஆட்சியர் ஆர்த்தி பெண்களுடன் இணைந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறி பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒருங்கிணைந்து முழக்கமிட்டு குலவையிட்டு பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.


அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சியும், பாரம்பரிய கலை விழா விளையாட்டுக்காக சிலம்பம், கட்டைக்கூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சி என ஆடல் பாடலுடன் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்ளை தெரிவித்தனர்.

மேலும், உரியடி திருவிழாவில் எம்பி செல்வம் கலந்து கொண்டு உரியடிக்க அனைவரும் ஆரவாரம் தெரிவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், திமுக ஒன்றிய செயலாளர் குமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி மற்றும் வரதராஜன், திம்மசமுத்திரம் கிராம ஊராட்சி துணைத் தலைவர் சுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செயலர் சரவணன், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்