/* */

சீன செயலி மூலம் லோன் வாங்காதீர்கள்: காஞ்சி சைபர் கிரைம் எச்சரிக்கை.

சீனா உள்ளிட்ட சட்ட விரோதமான வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

HIGHLIGHTS

சீன செயலி மூலம் லோன் வாங்காதீர்கள்: காஞ்சி சைபர் கிரைம் எச்சரிக்கை.
X

காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு எச்சரித்துள்ள  லோன் ஆப். 

தமிழகத்தில் தற்போது இணையதள குற்றங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக இணையவாசிகளை கவர்வதற்கு பல்வேறு வகையில் அவர்களின் ஆசையை தூண்டி விட்டு, சில நிமிடங்களில் கடன் பெறலாம் என அவர்களுக்கு ஆசை காட்டி முன் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி அவர்களது வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த கூறுகின்றனர்.

இதில் தங்களது ஆதார் மின்னஞ்சல் முகவரி மற்றும் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இவர்கள் சேமிப்பு பணம் அனைத்தும் மாயமாகிவிடுகிறது. இது தொடர்பாக இவர்களுக்கு வந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் போது அது பயன்பாட்டில் இல்லை என்றும் தகவல் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து அதன் பிறகு சைபர் கிரைம் உதவியை நாடுகின்றனர்.

இது போன்ற கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என சைபர் க்ரைம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் அதை அலட்சியப்படுத்தும் பொதுமக்கள் அதன் பின் அதனை உணரும் நிலையில் தங்களது பணத்தை இழந்த விபரத்தை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வுகள் கூட்டங்கள் கல்லூரிகள் குறிப்பாக பெண்கள் படிக்கும் கல்லூரிகள் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் சைபர் குற்றங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் குற்ற செயல்கள் குறித்து அவ்வப்போது அதன் பெயர்களையும் வெளியிட்டு பொது மக்களுக்கு அறியும் வண்ணம் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், டெலிக்ராம் மற்றும் அனைத்து வகையான இணையதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய கடன் செயலிகளை இணையதளத்தில் உலவ விட்டு வைத்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் இதுபோன்று சில நிமிடங்களில் கடன் பெறலாம் என்ற ஆசையை தவிர்த்து விட்டு முறையான வங்கிகளை நாட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் Easy Cash , Simpl Cash, Crazy Monkey, Takamall ,Small Cridet என பல பெயர்களில் போலி கடன் செயலிகள் உள்ளது என எச்சரித்து அனைவரும் கவனமாக செயல்பட மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 11 Feb 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு