/* */

காஞ்சி பிரபல பட்டு ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

பிரபல சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி பட்டு ஜவுளி நிறுவனத்தில் சென்னை வருமான வரி துணியினர் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சி பிரபல பட்டு ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
X

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வரமகாலக்ஷ்மி சில்க்ஸ்.

காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு ஜவுளி நிறுவனமும் மக்கள் நீதி மைய பிரமுகருக்கு சொந்தமான கடையில் சென்னை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் முதன்மையாக "கலாமந்திர்", "மந்திர்", "காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ்" மற்றும் "கேஎல்எம் ஃபேஷன் மால்" என்ற பிராண்ட் பெயர்களில் பிராண்டட் பெண்களுக்கு பிரத்தியேக புடவை விற்பனை செய்து வருகிறது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள உள்ள 60க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மூங்கில் மண்டபம் அருகே இயங்கி வரும் பிரபல பற்றி ஜவுளி நிறுவனமான வரமகாலட்சுமி சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளராக மக்கள் நீதி மைய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோபிநாத் என்பவர். இவருக்கு காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது.

இந்நிலையில் சென்னை வருமான வரித்துறை சார்ந்த அதிகாரிகள் காலை 7 மணி முதல் இரு வாகனங்களில் காவல்துறை பாதுகாப்புடன் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

வருமான வரி சோதனையில் விற்பனை மற்றும் கொள்முதல் உள்ள தேவைகள் குறித்தும் அதற்கான ஆவணங்கள் கணினி மூலம் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் இதற்கு ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆறு மாத காலமாகவே காஞ்சிபுரத்தில் பல்வேறு பட்டு ஜவுளி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் பல்வேறு சோதனைகளை திடீர் திடீரென மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வருமான வரி சோதனை நிறைவு பெற்ற பின் எந்த ஒரு தகவல்களையும் முழுமையாக தெரிவிப்பதில்லை என்பதும், இதனால் இது போன்ற நடைமுறைகள் பெரும் கண் துடைப்பா என்ற கோணத்திலும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

காஞ்சிபுரம் பி எஸ் கே தெருவில் அமைந்துள்ள பிரபல பட்டு ஜவுளி நிறுவனத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடைபெற்ற பின்பும் அது குறித்து எந்த ஒரு தகவல்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதும் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் இந்நிறுவனம் வர்த்தகம் செய்வது அனைவரும் அறிந்த ஓர் நிலையாகும்.

Updated On: 2 May 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  3. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  7. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்