/* */

கோயில் இடம் ஏலம் விடுவதை கண்டித்து மீன் வியாபாரிகள் சாலை மறியல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஏலம் விடுவதை கண்டித்து மீன் வியாபாரிகள் மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

கோயில் இடம் ஏலம் விடுவதை கண்டித்து  மீன் வியாபாரிகள் சாலை மறியல்
X

இந்து சமய அறநிலைத்துறை இடத்தை குத்தகைக்கு விட கோரி காஞ்சிபுரம் சென்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மீன் வியாபாரிகள்.

காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் காஞ்சிபுரத்தின் முக்கிய மீன் வியாபாரம் செய்யும் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மீன் மார்க்கெட் மற்றும் இதனை சுற்றி சுமார் 150 க்கும் மேற்பட்ட மீன் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மீன் மார்க்கெட் முகப்பு வாயில் பகுதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் இதனை ஏலம் விட காஞ்சிபுரம் அறநிலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்ததனர்.

இதனை கண்டித்து காஞ்சிபுரம் - சென்னை சாலையில் புதிய ரயில் நிலையம் அருகே மீன் மார்க்கெட் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் வட்டாச்சியர் பிரகாஷ் , இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் , காவல் ஆய்வாளர் மற்றும் உதவி தொடர்ந்து என அனைவரும் சமாதான பேச்சு வார்த்தை ஈடுபட்டதால் சாலை மறியலை கைவிட்டனர்.


Updated On: 6 May 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?