/* */

அப்போ குடிநீர் குளம் ! இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?

திருபத்திகுன்றம் கிராம ஊராட்சியில் எல்லையம்மன் கோயில் அருகே குடிநீர் குளம் நாளடைவில் கழிவுநீர் குளமாக மாறியுள்ளதால் குடிநீர் ஆதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

HIGHLIGHTS

அப்போ குடிநீர் குளம் !  இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?
X

திருப்பதி குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோயில் அருகே உள்ள குளம்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பருத்திகுன்றம் கிராம ஊராட்சி. காஞ்சிபுரம் புறநகர் வளர்ச்சியில் இப்பகுதி சிறந்த தேர்வாக பொதுமக்களால் தேர்வு செய்து, விரிவாக இப்பகுதி வளர்ந்து வருகிறது. கிராம ஊராட்சியில் திருப்பதிகுன்றம் - கீழ்கதிர்பூர் சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே மிகப் பெரிய திருக்குளம் உள்ளது.

அக்காலத்தில் பெரும் குடிநீர் ஆதாரமாகவும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு பெரிதும் இக்குளம் இருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குளம் குறுகி, கழிவுநீர் கூடமாக மாறி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது இக்குளத்தில் நாள்பட்ட தேங்கும் நீரின் நிறம் மாறி, கழிவு நீரும் கலந்து பூமியில் தேங்குவதால், குளக்கரை மேல் சிறிய ஆழ்துளை கிணறு நீர் பயன்படுத்த முடிவதில்லை. கிராம ஊராட்சி இக்குளத்தை சீர் செய்து நல்ல குடிநீர் ஆதாரமாக மாற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 19 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு