/* */

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிப்பு ஏன் தெரியுமா?

குப்பை கிடங்கு தீயை அணைக்க தவறிய காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிப்பு ஏன் தெரியுமா?
X

தீ பிடித்து எரிந்த இடத்தை மேயர் மகாலட்சுமி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கடந்து மூன்று நாட்களாக இரண்டு பகலாக தொடர்ச்சியாக குப்பை எரிந்து வருகின்றது. தீயை அணைக்காமல் மெத்தனமாக இருந்ததால் மாசு கட்டுபாட்டு வாரியம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மூன்று நாட்களாக எரியும் குப்பையை ஏன் அணைக்கவில்லை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லையா? என கேள்வி எழுப்பிய மேயர் மெத்தனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

மேலும் இனி வரும் காலங்களில் குப்பை எரிந்தால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிவாசிகள் பாதிக்காமல் இருக்க உடனே தீயை அணைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் மர்ம நபர்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளதால் அவர்கள் இது போன்ற செய்திகள் ஈடுபட்டு இருப்பதாக அப்பகுதி வழியாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கவும், தனியார் கழிவு நீர் வாகனத்திற்கு தடை விதிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On: 11 April 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்