/* */

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பாலம் : தடையை மீறும் லாரிகளால் உடையும் ஆபத்து

சேதமடைந்த செய்யாறு பாலத்தில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட போதிலும், லாரிகள் அத்து மீறி பாலத்தில் செல்கின்றன. இதனால் பாலம் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பாலம் : தடையை மீறும் லாரிகளால் உடையும் ஆபத்து
X

தடையை மீறி செல்லும் லாரி

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகறல் செய்யாறு பாலம் சேதமடைந்து நேற்று வரை பஸ் போக்குவரத்து தடை செய்யபட்டு இருசக்கர வாகனங்கள் , கார் ஆகியவை செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாலத்தின் மறுபகுதியில் விரிசல்‌ ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பாலத்தினை ஆய்வு மேற்கொண்ட பின் இன்று காலை முதல் பொதுமக்கள் சிரமத்தினை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்திற்கு அனுமதியளித்து.

ஆனால் லாரிகள் செல்ல அனுமதியில்லை என நெடுஞ்சாலைத் துறை சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகையை எந்த ஒரு லாரி உரிமையாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

இவ்வழியாக சிலிண்டர் லாரிகள், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிக பார் உஙகளுடன் செல்வதால் விரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகமாக கூடும் என்பதை அறியாமல் எந்த ஒரு பாதுகாப்பும் நடவடிக்கையும் பாலத்தின் கீழ் மேற்கொள்ளாமல் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது நெடுஞ்சாலைத்துறை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் லாரிகள் செல்லாதிருக்க வாகனங்களை கண்காணிப்பது நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களா ? அல்லது காவல் துறை அலுவலர்களா ? என கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Updated On: 28 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்