/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் தற்காலிக தடை

காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு மாமன்ற உறுப்பினராக ஷாலினி வேலு செயல்பட்டு வரும் நிலையில் தேர்தலில் போலி ஜாதி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் தற்காலிக தடை
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஷாலினி வேலு செயல்பட நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போலி சான்றிதழ்கள் சமர்பித்து வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினரை உறுப்பினர் பதவியில் நீடிக்க தற்காலிக தடை விதித்து மாவட்ட நீதிபதி எண் 2 திரு செம்மல் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட விரும்பியவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது பதவி ஏற்றுள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 27 இல் திமுக சார்பில் விஜயகுமாரியும் , சுயேச்சையாக தென்னை மர சின்னத்தில் ஷாலினி உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர்.

இதில் 392 வாக்கு வித்தியாசத்தில் ஷாலினி வெற்றி பெற்று தற்போது மாநகராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டு மாமன்றங்களில் நடக்கும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு இருந்தார்.


இந்நிலையில் இருபத்தி ஏழாவது வார்டு பகுதி பட்டியலியின பெண்களுக்கானவர்கள் மட்டுமே போட்டியிட இயலும். இந்நிலையில் திமுகவை சேர்ந்த விஜயகுமாரி மேற்படி வெற்றி பெற்ற வேட்பாளர் திருமதி ஷாலினி வன்னியர் இன வகுப்பை சேர்ந்தவர் என்பது பள்ளி சான்றிதழில் உள்ளதாகவும், வேட்பு மனு தாக்கலின் போது அரசிடம் பெற்ற சான்றிதழில் ஆதிதிராவிடர் என குறிப்பிட்டுள்ளார். இதை இவர் முறைகேடாக பெற்றுள்ளதாகவும், இதனை தேர்தலில் சமர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளதால் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என விஜயகுமாரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தார்.

இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் முன்னிலையில் நடந்து வந்தது. இந்நிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் போலிச்சான்றிதழ் வழங்கியதற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் வழங்கிய தீர்ப்பில் ஷாலினிவேலு மாமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்கவும், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்ந்த மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவும் தற்காலிகத் தடை விதித்து மாவட்ட நீதிபதி யு.செம்மல் தீர்ப்பளித்துள்ளார்.

Updated On: 21 Oct 2023 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...