/* */

பி.எம். கேர் திட்டத்தில் 9 குழந்தைகளுக்கு ஆட்சியர், எம்எல்ஏ நிதியுதவி

காஞ்சிபுரத்தில் பி.எம். கேர் திட்டத்தில் 9 குழந்தைகளுக்கு ஆட்சியர், எம்எல்ஏ நிதியுதவி வழங்கினர்.

HIGHLIGHTS

பி.எம். கேர் திட்டத்தில் 9 குழந்தைகளுக்கு ஆட்சியர், எம்எல்ஏ நிதியுதவி
X

பாரத பிரதமருடன் நடைபெற்ற நேரடி காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த நிலையில் அவர்களின் கல்வி, பாதுகாப்பு, நிதி உள்ளிட்டவைகளை உறுதிபடுத்தும் வகையில் பி.எம்.கேர் பார் சில்ட்ரன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூபாய் பத்து லட்சம் வைப்பு தொகை மற்றும் ரூ ஐந்து லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கீழ் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதம மந்திரி உடனான காணொளி நேர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை சந்தித்துள்ளதாகவும், பெற்றோர் மற்றும் பாதுகாவலரை இழந்த குழந்தைகள் கருத்தில் கொண்டு இத் திட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இக்கு குழந்தைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது குழந்தைகளுக்கு ரூபாய் 10 லட்சம் பைப்பு தொகை செலுத்தப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் ரூபாய் ஐந்து லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சூரியகலா , இளைஞர் நீதி குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு