/* */

வெள்ளத்தால் பாதித்த போரூர், கொளப்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு.

சென்னை புறநகர் பகுதிகளான போரூர் ஏரி , கொளப்பாக்கம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதித்த போரூர், கொளப்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு.
X

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வருக்கு விளக்கும் அதிகாரிகள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த தாழ்வழுத்த காற்று மண்டலம் காரணமாக கடந்த 15 தினங்களாக கனமழை பெய்து வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வீடுகளில் நீர் சூழ்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக மழைப்பொழிவு குறைந்த காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளைத் தீவிரப்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜபுரம் முடிச்சூர் கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று தமிழக முதல்வர்ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கொளப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் நீர் சூழ்ந்துள்ள பகுதியினை ஆய்வு மேற்கொண்டு விரைவாக நீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விவரித்தனர். அதன்படி அதிகாரிகளுக்கு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். அதன்பின் போரூர் ஏரியினை பார்வையிட்டார்.

மேலும் மாங்காடு சாலையில் செல்லும் கால்வாய் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 நபர்களுக்கு மதிய உணவு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் போரூர் நகரை சுற்றியுள்ள பல பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் , நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு , காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் எல். சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்

Updated On: 4 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு