/* */

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் தின விழா கோலாகலம்

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் காஞ்சிபுரத்தில் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் தின விழா கோலாகலம்
X

காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்தி குன்றம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்ட போது உடன் ஊராட்சி மன்ற தலைவர் மலர் ராமச்சந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின்.

குழந்தைகள் தினம் என்றாலே பள்ளி குழந்தைகள் முதல் உயர்நிலை பள்ளி மாணவர்களை மகிழ்ச்சி கடலில் திகழ்வார்கள். பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் பரிசு பொருட்களைக் கொண்டு வீட்டில் உள்ள பெற்றோர்களும் காட்டி மகிழ்வர்.

மேலும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்று குழந்தைகள் தின விழா நடைபெறும். இந்நன்னாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

இதனை முன்னாள் பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தன்னுடைய காலகட்டத்தில் இதனை அவசியம் குறித்து அனைவருக்கும் உணர்த்தினார்.

இதனால் அவரது பிறந்த நாளான இன்றைய தினம் குழந்தைகள் தின நாளாக ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இனிப்புகள் கொண்டாடி அவர்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின கொண்டாடப்பட்டு அவர்களின் கல்வி மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் பல பள்ளிகளில் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கூறும் வகையில் கட்டுரை போட்டி , கவிதை போட்டி , பேச்சுப்போட்டி ஃ இசைபோட்டி , நடன போட்டி என பல வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டதால் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி உள்ளனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் குழந்தைகளுக்கு இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கி குழந்தைகள் நல தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதன்பின் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் திருமண மண்டபத்தில் வைக்கும் விளம்பர பதாகைகளை ஆட்சியர் ஆர்த்தி வெளியிட தொண்டு நிறுவன அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதேபோல் காஞ்சிபுரம் அடுத்த திருப்பதிகுன்றம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கினர். இதேபோல் இரு வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகள் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின் , ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாராயண குரு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பரிசு பொருட்களை பள்ளி தாளாளர் அருண்குமார் , மேலாளர் ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.

Updated On: 14 Nov 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!