/* */

அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்
X

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் குடியிருக்க வீடு கேட்டு கோரிக்கை மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்க்கதிர்ப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கட்டப்பட்டுள்ளது.

இவற்றில் அரசு புறம் போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.


அரசு மானியத்துடனும், கடனுதவியோடும் வழங்கப்படும் இவ்வீடுகளைப் பெறுவதற்காக காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் குடியிருக்க வீடு தருமாறு கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் வீடு கேட்டு வந்ததால் ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் கரோனா அச்சமின்றி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்துக் கொண்டு மனு கொடுக்க முற்பட்டனர்.

இதனால் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டது.மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Updated On: 9 Aug 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்