/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் டெண்டர் எடுத்து செய்து வரும் பணிகளை பாதியில் நிறுத்த வேண்டாம் என கலெக்டரிடம் அதிமுக மனு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் டெண்டர் எடுத்து செய்து வரும் நபர்களின் பணிகளை பாதியில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி அதிமுகவினர் கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் டெண்டர் எடுத்து செய்து வரும் பணிகளை பாதியில் நிறுத்த வேண்டாம் என கலெக்டரிடம் அதிமுக மனு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெண்டர் எடுத்து செய்து வரும் பணிகளை பாதியில் நிறுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தி அதிமுகவினர் கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையிலான அதிமுக வினர் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இம்மனுவில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளங்கள், கால்வாய் சீரமைத்தல் மற்றும் இதர பணிகள் அனைத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது,

தற்போது பணிகளை நிறுத்தி வேறு நபருக்கு அதே வேலையை ஒதுக்கி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பணிகளை முடிப்பதில் குளறுபடிகள் ஏற்படும் நிலை உள்ளது எனவே ஏற்கனவே ஒதுக்கீடு செய்த நபர்களையே தொடர்ந்து இப்பணிகள் செய்ய உத்திரவிட வேண்டும் .

கிராமங்களில் உள்ள மக்கள் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமப்புறங்களில் தடுப்பூசி முகாம்களை அமைத்து விரைவாக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்ற வருடம் முன்னாள் தமிழக முதலமைச்சரும் கழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்தபோது காஞ்சிபுரம் மாவட்ட வியாபாரிகள் வைத்த கோரிக்கையை ஏற்று காந்தி ரோடு ஓருவழிபாதையையாக இருந்தை மாற்றி அமைத்தார்,

மீண்டும் ஒரு வழி பாதையாக தற்போது மாற்றியதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . எனவே அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய பெருமக்களின் இன்னல்களை நீக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளின் விளைபொருட்களை உரிய முறையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றினல் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழில் கொரானவால் மரணம் என்பதை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது

இதில் கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பழனி உள்ளிட்டோர் உள்ளனர்.

Updated On: 5 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி