/* */

தேர்தல் நாளில் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 பேர் மீது வழக்கு

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராமத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வாக்களிக்க வற்புறுத்தியதாக கூறி இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

தேர்தல் நாளில் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 பேர் மீது வழக்கு
X

வழக்கு சம்பந்தமான சம்மன் பெற்ற ஏகனாபுரம் பகுதி நபர்கள் காவல் ஆய்வாளர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடைபெற்ற நாளில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் உறவினர்களை வாக்களிக்க நிர்பந்திப்பதாக கூறி ஏகனாபுரம் போராட்ட குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தரக்குறைவாக நடந்து கொண்டதாக வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காவல் நிலையத்தில் ஆஜராக கூறியதால் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலிலும் பொதுமக்கள் வாக்களித்த நிலையில் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் நாகப்பட்டு கிராம பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற போது அரசு ஊழியர்கள் மட்டுமே மதியம் 2 மணி வரை சுமார் 12 பேர் வாக்களித்து இருந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் எழிலரசன் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களை வாக்களிக்க வருமாறு கூறி பேசி வருவதாக போராட்ட குழுவினர் அறிந்து அங்கு சென்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டிஎஸ்பி மணிமேகலை தலைமையிலான காவல்துறை குழுவினர் அங்கு சென்று உடனடியாக வட்டாட்சியர் மற்றும் அவரது வாகனத்தை மீட்டு மீண்டும் வாக்கு சாவடி மையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்நிகழ்வில் போது வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தன்னை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசி அரசு பணியை செய்ய விடாமல் பலர் தடுத்ததாகவும் அதிர் ஒருவர் தன்னை தாக்க முயற்சித்து தாகும், இதேபோல் ஓட்டுனரின் சிலர் தாக்க முயற்சித்து அரசு பணிகள் செய்ய விடாமல் தடுத்ததாக அளித்த புகாரின் பேரில், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன் , முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர் , சுதாகர் ஓம் பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் , 147, 294(b), 332,341,353 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து அந்த பத்து நபர்களுக்கும் சுங்குவார்சத்திரம் காவல்துறையிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இன்று காலை 10:30 மணிக்குள் நேரில் ஆஜராகி வழக்கு குறித்த விளக்கங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் அந்த பத்து பேர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் ஆய்வாளர்கள் பேசில் பிரேம் ஆனந்த் அவர்களுடன் பேசி இவ்வளவு கூட்டம் கூட வேண்டிய அவசியம் என்ன எனவும், விசாரணைக்காக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் பொது மக்களை காவல் நிலையம் திட்டு உள்ளே ஓரமாக அமரும்படி அறிவுறுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On: 22 April 2024 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...