/* */

வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது, 2000 கிலோ அரிசி பறிமுதல்

காஞ்சிபுரத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2000 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குடிமை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது, 2000 கிலோ அரிசி பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் அரிசியை சிலர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஆந்திரா , கர்நாடகா , கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்துக்கு பஸ், ரயில் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்திச் சென்று அங்கு கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறைக்கு தொடர் புகார் வந்ததையடுத்து காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வாளர் விநாயகம் சோதனை மேற்கொண்டபோது , காஞ்சிபுரத்தை சேர்ந்த பாரதிதாசன் மற்றும் பார்த்திபன் இருவரும் திருப்பதி செல்ல உள்ளதாக கூறியது தொடர்ந்து சந்தேகமடைந்து அவருடன் வந்த மூட்டையை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மேலும் ராஜேஷ் என்பவர் கூட்டு கூட்டு சேர்ந்து வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர், இவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கடத்த விருந்த 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 28 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்