/* */

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை கொள்ளை

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை, ரூபாய் 10,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை கொள்ளை
X

திருடுபோன தனியார் தொழிற்சாலை ஊழியரின் வீடு மற்றும் வீட்டினில் சிதறிக்கிடந்த பொருட்கள்

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு - ஓரிக்கை சாலையில் அமைந்துள்ளது வடிவேல் நகர். இந்நகரில் அசோக்குமார் என்பவர் தனது மனைவி சுபா உடன் வசித்து வருகிறார்.

பணி காரணமாக திருவண்ணாமலையில் தங்கி இருந்து வாரம் ஒரு முறை அசோக்குமார் இங்கு வருவது வழக்கம். அதேபோல் அவரது மனைவி ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஒரு மாதம் முன்பு இவர்களது குழந்தைக்கு காதணி விழா நடைபெற்ற போது அன்பளிப்பாக தங்க மோதிரம் உறவினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த அறையில் இருந்த பீரோ கட்டில் உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் சிதறி கிடந்தன.

இதை அடுத்து பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த சரடு , வலையல், கம்மல் உள்ளிட்ட 22 சவரன் நகை, ரொக்கம் ரூபாய் பத்தாயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் காவல்துறை கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்களும் கடந்தவாரம் பொழுது பார்க்கும்போது அதில் கேமரா பதிவை நிறுத்தி வைத்து உள்ளதால் வந்த நபர் குறித்த பதிவுகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்