/* */

வாகன தணிக்கையில் ஓரே மாதத்தில் ரூ.15 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் , காஞ்சிபுரம் வாலாஜாபாத் - சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வாகன தணிக்கையில் ஓரே மாதத்தில் ரூ.15 லட்சம் அபராதம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம். 

கடந்த ஒரே மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பதினைந்து இலட்சம் ருபாய் அரசுக்கு வருவாய் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரில் வாகன நெரிசல் எப்போதும் காணப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுக்களாக அளித்து வந்தனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவுரையும் பேரில் கடந்த செப்டம்பர்-2022 மாதம் காஞ்சிபுரம், வாலஜபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் வாகன தணிக்கையில் சுமார் 1500 வாகனங்களை தணிக்கை செய்து 164 வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

இதில் ரூபாய் 6,06,700/- இணக்கக்கட்டண வசூலாகவும் (ஸ்பாட் பைன்) , ரூபாய் 8,71,700/- இணக்கக்கட்டணம் ஆக மொத்தம் ரூபாய் 14,78,400/- அபராதத்தை அரசுக்கு ஈட்டி கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதில் 74 வாகனங்கள் தகுதிச்சான்று (எப்.சி), அனுமதிசீட்டு (பெர்மிட்), சாலைவரி (ரோடு டாக்ஸ்) போன்ற குற்றங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டது.

அதன் பின் ஒட்டுனர்களுக்கு சாலைபாதுகாப்பு, வாகன நெரிசல், வாகன ஆவணங்கள் முறையாக பராமரிப்பது போன்றவைகளை விளக்கிக்கூறியும் இனியும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினார்.

தணிக்கை அறிக்கை வழங்கப்பட்ட 164 வாகனங்களில் கீழ்க்கண்ட குற்றங்கள் குறிப்பிடப்படக் கூடியவையாகவும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகவும் குறிப்பிடலாம்.

1) சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றியது – 10

2) ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 49

3) காப்புசான்று இல்லாதது – 57

4) ஆட்டோரிக்ஷாவில் கட்டனமாணி இல்லாமல் இயக்கியது – 82

5) தலைகவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 18

6) முறையற்ற பதிவுஎண் கொண்ட வாகனத்தை இயக்கியது – 47

7) அனுமதிசீட்டு இல்லாமல் மற்றும் புறம்பாக இயக்கியது – 19

8) தகுதிச்சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 57

9) சரக்கு வாகனங்களில் தார்பாய் மூடப்படாமல் இயக்கியது – 34

10) சீருடை இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 16

மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் இத்தனிக்கை குறித்து விளக்கும்போது, வாகன தணிக்கையின்போது தான் செய்த குற்றத்தை புரியவைத்தும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றம் செய்யதவாறு அறிவுரை வழங்கியும் சாலை பாதுகாப்பு விளக்கங்கள் கூறியும் அனுப்பி வைப்பதாகவும், கட்டாயம் தன்னிடம் வாகன தணிக்கையின் போது பிடிபடும் ஓட்டுனர் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபடமாட்டார் என்றும் உறுதிபடவும் நெகிழ்வுடனும் கூறினார்.

Updated On: 3 Oct 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...