/* */

காஞ்சிபுரத்தில் பல்வேறு சங்கங்களின் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது

சாலை விதிகள், தொழிலாளர் பாதுகாப்பு அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பல்வேறு சங்கங்களின் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது
X

காஞ்சிபுரம் மாவட்ட இருசக்கர வாகன மெக்கானிக் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது

நாடு முழுவதும் உழைப்பாளர்களின் உழைப்பை போற்றும் வழியில் இன்று மே1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மே தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட இருசக்கர வாகன மெக்கானிக்காளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் காவல் துறை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால், ஹெல்மெட் அணிதல், கொரோனா வழிகாட்டு முறைகள், தொழிலாளர் பாதுகாப்பான முறைகளில் பணிபுரிதல் குறித்த கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் குமாரராஜன் , துணைத்தலைவர் பாரதி , பொருளாளர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட வண்ணம் தீட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் ரங்கசாமி குளத்திலிருந்து தாலுக்கா அலுவலகம் வரை மே தின பேரணி நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணம் தீட்டும் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் டில்லி பாபு தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.


Updated On: 1 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  6. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  7. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  8. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  9. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  10. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...