/* */

சின்னசேலத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு துவக்கம்

சின்னசேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

சின்னசேலத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு துவக்கம்
X

சின்னசேலத்தில் நடைபெற்ற ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் குறித்த பயிற்சி வகுப்பு.

சின்னசேலம் பேரூராட்சியில் 18 வார்டுகளில், 23 ஓட்டுச்சாவடி மையங்களில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு நேற்று, சின்னசேலத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தலைமை தாங்கினார். மண்டல அலுவலர்கள் ரமேஷ்பாபு, பெரியண்ணா முன்னிலை வகித்தனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜா வரவேற்றார். பயிற்சியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தும் வழிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த பயிற்சி வகுப்புக்கு கமிஷனர் கீதா தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். 27 வார்டுகளுக்கு, 35 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் 168 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில் நடந்த பயிற்சி வகுப்பினை தேர்தல் நடத்தும் அலுவலர் நகராட்சி கமிஷனர் குமரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டி.இ.ஓ., சிவராமன் முன்னிலை வகித்தார். 21 வார்டுகளுக்கு அமைக்கப்படவுள்ள 46 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் 168 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மண்டல அலுவலர்கள் சர்ச்சில் காரல்மார்க்ஸ், முரளி, ராஜா ஆகியோர் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விளக்கினர். தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி வரும் 9ம் தேதியும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு 18ம் தேதியும் நடக்கிறது.

Updated On: 1 Feb 2022 4:14 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு