/* */

தமிழ்வளர்ச்சித்துறையின் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு வென்ற மாணவர்கள்

ஈரோடு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மார்ச் 27 ல் நடத்தப்பட்டன

HIGHLIGHTS

தமிழ்வளர்ச்சித்துறையின் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில்  பரிசு வென்ற மாணவர்கள்
X

பைல் படம்

மாணவர்களிடையே படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் 2022- 2023 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 27.03.2023 அன்று முற்பகலில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக 2-ஆம் தளக் கூட்ட அரங்கில் நடத்தப் பெற்றது.

கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு நடுவர்களாக இணைப் பேராசிரியர் க.வீ.இளங்கோவன், உதவிப்பேராசிரியர் கள் முனைவர் இரா.விஸ்வநாதன், முனைவர் மு.தனசேகரன், முனைவர் மா. தினேஸ்வரன், முனைவர் சரவணக்குமார், முனைவர் அ.குருமூர்த்தி, முனைவர் த.கண்ணன், பெ.தமிழ்ச்செல்வி ஆகியோர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

கவிதைப் போட்டியில் திண்டல், வேளாளர் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த வா.பிரதாப் முதல் பரிசு ரூ.10000-மும், கோபிசெட்டிபாளைய, கோபி கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த சு.ரஞ்சிதா இரண்டாம் பரிசு ரூ.7000-மும், ஈரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த பா.கார்த்தி மூன்றாம் பரிசு ரூ. 5000-மும் பெற்றுள்ளனர்.

கட்டுரைப் போட்டியில் ஈரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த ச.சந்தியா முதல் பரிசு ரூ.10000-மும், ஈரோடு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த செ.சந்தியா இரண்டாம் பரிசு ரூ.7000-மும், கோபிசெட்டிபாளையம், கோபிகலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த சீ. கீர்த்தனா மூன்றாம் பரிசு ரூ.5000- மும் பெற்றுள்ளனர்.

பேச்சுப் போட்டியில், ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த மு.கௌரிமனோகரி முதல் பரிசு ரூ.10000-மும் சித்தோடு, ஸ்ரீவாசவி கல்லூரியைச் சேர்ந்த மு.வாஞ்சிநாதன் இரண்டாம் பரிசு ரூ.7000-மும், ஈரோடு, கலைமற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த சு.அமல்உண்ணிகிருஷ்ணன் மூன்றாம் பரிசு ரூ.5000-மும் பெற்றுள்ளனர். என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

Updated On: 30 March 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க நண்பனுக்கு பிறந்தநாளா.. வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டைக் கொண்டாட சில பாரம்பரிய வழிகள்
  3. ஆன்மீகம்
    உள்ளங்களை மகிழ்வித்து இல்லங்களை ஒளிவீசச் செய்யும் கிறிஸ்துமஸ்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    தலைகீழாக அந்தர்பல்டி அடித்த Seeman | குழப்பத்தில் புலம்பும் தம்பிகள் |...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் புத்த பூர்ணிமா விழா..!
  7. பூந்தமல்லி
    இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை..!
  8. ஆவடி
    மழையால் ரயில் சிக்னல் இயக்கம் பாதிப்பு : ரயில்கள் நிறுத்தம்..!
  9. பொன்னேரி
    பழைய குடிநீர் மேல்நிலை தொட்டி இடிப்புப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு..!
  10. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!