/* */

விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!

ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஏரியில் அளவுக்கு மீறி சவுடு மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!
X

பொக்லின் இயந்திரம் மூலமாக மண் தொடப்பட்டு லாரிகளில் ஏற்றப்படுகிறது.

ஊத்துக்கோட்டை அருகே ஆறு வழி சாலை அமைக்கும் பணிக்காக விதிகளை மீறி ஏரியில் 40 அடி ஆழத்திற்கு மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதாக கூறி சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், தச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பேரட்டிவாக்கம்- மாம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு இடையே செல்லும் ஏரியில் சவுடு மண் அல்ல மாவட்ட நிர்வாகம் கனிமவளத்துறை அதிகாரிகளும் தனிநபருக்கு ஆறு வழி சாலை பணிக்காக மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது.

அரசு விதிகளின்படி மூன்றடி ஆழம் வரை எடுக்க அனுமதித்த நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் 15முதல் 25 அடி ஆழம் வரை விதிகளை மீறி நாள் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் ஏரி பாசன விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.


இது மட்டுமல்லாமல் தற்போது கோடை காலம் என்பதால் சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடி தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பேரட்டிவாக்கம் கிராம மக்கள் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி சவுடுமண் குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தற்காலிகமாக ஆறு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்காக மண் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 May 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  2. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
  4. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  5. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  7. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  8. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  9. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி
  10. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்