/* */

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.65 அடி

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு, 913 கன‌ அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.65 அடி
X

பவானிசாகர் அணை.

நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்ததாக 2வது பெரிய அணையாகவும் விளங்குகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, ஆகஸ்ட் 5ம் தேதி நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து சீராக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் கடந்த 57 நாட்களாக தொடர்ந்து, 102 அடியாகவே நீடித்தது.

இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து 913 கன அடியாக சரிந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 102 அடியிலிருந்து 101.65 அடியாக குறைந்தது. இதையடுத்து, அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Oct 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!