பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?

பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
X

இளையராஜா - கோப்புப்படம் 

தான் காப்புரியை பெற்ற தன் பாடல்களுக்கான இசைக்காப்புரிமையினையும், அதில் கிடைக்கும் ராயல்டி வருமானத்தையும் முறைப்படி தன் இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கி விட்டார்.

இந்திய திரை இசையின் உச்சம் தொட்டவர் இளையராஜா. இவரை இசை அவதாரமாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு புகழ் பெற்ற இசைஞானி பண ஆசை இல்லாதவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இவர் இசையமைத்த பாடல்கள், படங்களுக்கான சம்பளம் இதுவரை கொடுக்காத பலநுாறு பேர் இன்னும் திரையுலகில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர்.

இசையை நோட்சாக வடித்து சப்தகட்டுக்களை உருவாக்குவதில் இவருக்கு இணையாக யாரும் இன்னும் உருவாகவில்லை. மிகப்பெரிய வருத்தமான விஷயம் இன்று சவுண்ட் இன்ஜியர்கள் பலரும் இசையமைப்பாளர்களாகி விட்டது தான். இசையை வரிவடிவத்தில் நோட்ஸ் ஆக எழுதி, ஒவ்வொரு இசைக்கருவி வாசிப்பாளர்களுக்கும் கொடுத்து நேர்த்தியான இசையை கொண்டு வருபவர் இளையராஜா. இன்றைய இசையமைப்பாளர்கள் எனப்படும் சவுண்ட் இன்ஜினியர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை ரசனைக்கு ஏற்ற வகையில் கலந்து கொடுப்பவர்கள். (இந்த விளக்கத்தை ஏற்கனவே பல விமர்சகர்கள் பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்).

இன்றைய சினிமா உலகில் சவுண்ட் இன்ஜியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வாத்தியங்களை இசைக்கும் உண்மையான கலைஞர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுகின்றனர். இவர்கள் அழிந்து விட்டால் இந்த இசைக்கலை அடியோடு அழிந்து விடும். இதனால் இந்திய, தமிழக, பல்வேறு கலாச்சார இசையை பாதுகாக்க தனது 80வது வயதிலும் இடைவிடாமல் போராடி வருகிறார் இசைஞானி.

இவரது போராட்டத்தின் ஒரு பகுதி தனது பாடல்களுக்கான காப்புரிமை தன்னிடம் இருக்க வேண்டும் என்பது தான். இந்த காப்புரிமையை பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு இடையே பெற்றும் விட்டார். இப்படி இளையராஜா காப்புரிமை பெற்றதை பலரும் புரியாமல் விமர்சித்து வரும் நிலையில் சப்தமில்லாமல் ஒரு பெரிய அரிய சாதனை செய்துள்ளார் இசைஞானி.

ஆமாம். தான் காப்புரியை பெற்ற தன் பாடல்களுக்கான இசைக்காப்புரிமையினையும், அதில் கிடைக்கும் ராயல்டி வருமானத்தையும் முறைப்படி தன் இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கி விட்டார். தனது பாடல்களின் காப்புரிமையின் ராயல்டி தொகையை இசைக்கலைஞர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.

அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.

தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.

நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது. காரணம் இன்றி காரியம் இல்லை. என்றென்றும்ராஜா.. அது இளையராஜா.

Tags

Next Story
ai tools for education