மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த முன்னோர்..!
சாயா சோமேஸ்வரர் கோயில்.(கோப்பு படம்)
சாயா சோமேஸ்வரர் என்னும் சிவன் கோயில். ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் பத்தாவது நூற்றாண்டில்,,,கண்டூக சோழர்களால் நிர்மாணிக்கப்பட்ட புராதானக் கோயில். இந்தக் கோயிலில்- அமைந்துள்ள நிழல் அதிசயம் இன்றளவும் அறிவியலை அறை கூவி அழைக்கிறது. அந்த அதிசய நிழல்கள்? என்ன..என்று பார்க்கலாம் வாங்க.
ஒன்று:
இக்கோயிலில் அமைந்துள்ள மூன்று கருவறைகளில் -ஒரு லிங்கத்தின் நிழல் மட்டுமே விழுகிறது. இந்த நிழலில் என்ன அதிசயம் என்கிறீர்களா?. அந்த நிழல் நகர்வதே இல்லை? சாதாரணமாக,,,,சூரியன் ஒளி நகர நகர இடமோ,,,வலமோ முன்போ பின்போ நிழல் என்னும் பிம்பம் நகரத் தானே வேண்டும்? ஆனால் இந்த நிழலோ அச்சடித்த நிழல் போல் அப்படியே நிற்கிறது. இயற்கையை வெல்லும் இதன் சூட்சுமத்தை இன்றளவும் எந்த அறிவியலாரும் கண்டுபிடிக்க இயலவில்லை?. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை இந்த சீரிய மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இரண்டு:
ப்ரம்மக் கருவறை. இந்தக் கருவறையின் சிலையின் முன்னால் ஒருவர் நின்றால் அவர் தம்முடைய நான்கு நிழல்களை ஒருசேரப் பார்க்க முடியும்?. ஒரே சமயத்தில் ஒருவரது நிழல்,,,,,நான்காக எப்படித் தெரியும்? இதுவும் அறிவியலுக்கு அப்பாற்பட்டது தானே?
மூன்று :
சாயா லிங்கக் கருவறை: இந்தக் கருவறையின் முன் ஒருவர் நின்றால் அவரது நிழல்,,,அவருக்குப் பின்புறமாகவே விழுகிறது?? காலை, மாலை வேளைகளில் நமது நிழல் நமக்கு,,,முன்பாகவோ பின்பாகவோ விழும். ஆனால் இங்கே மட்டும் எப்போதுமே நம் நிழல் நம் பின்புறமாகவே விழும் அதிசயம் நடக்கிறது, மூன்றையும் விட மிக முக்கிய அதிசயம் இங்குள்ள லிங்கத்தின் முன்னால் நான்கு தூண்கள் உள்ளன. லிங்கத்தின் மீது ஒரு தூணின் நிழல் விழுகிறது.
நான்கு
தூண்களில் எந்தத் தூணின் நிழல் லிங்கத்தின் மேல் விழுகிறது என்பதை இன்றளவும் கண்டுபிடிக்க இயலவில்லை
காரணம்? நான்குத் தூண்களில் எந்தத் தூணின் அருகே நாம் நின்றாலும் லிங்கத்தின் மேல் சம்பந்தப்பட்ட அந்தத் தூணின் நிழல் தான் விழுகிறதே தவிர நம் நிழல் விழுவதே இல்லை?? இப்படிப் பல அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இக்கோயில் சாயா என்றால் நிழல் என்று பொருள். சூரியனின் மனைவி பெயரும்--சாயா தான். நிழல் அதாவது ஒளியின் பிம்பம் சாயா என்றால் ஆதித்யனின் மனைவி பெயரும் சாயா என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?
இப்படிப் பல ரகசியங்கள்,,,,கிட்டத்தட்ட பல ஆயிரங்கள் முன்பே இருந்திருக்கிறது என்றால் அன்றைய சித்த புருஷர்களின் லீலை எனலாம். நம்மவர்களின் அறிவியல் திறனை விட பல நூறு மடங்கு அதிகமாக அந்த நாளைய மனிதர்களுக்கு அறிவுத்திறன் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவர்கள் அதை வைத்து ஆணவத்தில் ஆடாமல் நாத்திகம் பேசாமல் மெய் ஞானத்தில் விஞ்ஞானத்தைக் கலந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே உறவுகளே??
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu