சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?

சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
X

சவுக்கு ஷங்கர் (கோப்பு படம்)

இனியாவது ஒட்டுமொத்த ஊடகத் துறைகளிலும் ஊடுறுவியுள்ள, மோசடிக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். காரணம், புனிதம் வாய்ந்த ஊடகத் துறையில், இன்று பல புல்லுருவிகள், சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். செய்தி, வீடியோ பதிவிடுவதாக கூறி மிரட்டி பணம் சம்பாதிக்க ஊடகத் துறையினை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விஷயம் தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. ஊடகத்துறைக்குள் புகுந்து சமூக விரோத செயல்கள் செய்யும் நபர்களை களையெடுக்க வேண்டும். அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில், சவுக்கு சங்கர் சிக்கியுள்ளார். அவர் கைதுக்கு காரணமான வீடியோவை பார்த்த யாருமே, சவுக்கு சங்கர் கைது தவறு என சொல்ல முடியாது. மாறாக சவுக்கு சங்கரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தான் சொல்லுவார்கள்.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்படும் வழக்கு விவரங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்; இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஆபாச செயல்கள் மற்றும் பாடல்கள் எவரேனும், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில்:- (a) ஏதாவதொரு பொது இடத்தில் ஏதாவதொரு ஆபாசச் செயலைச் செய்தால் அல்லது (b) ஏதாவதொரு பொது இடத்தில் அல்லது அதன் அருகில் ஏதாவதொரு ஆபாசமான பாடலை, நாட்டுப்புறப் பாடலை அல்லது வார்த்தைகளைப் பாடினால், உச்சரித்தால் அல்லது கூறினால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 509. இந்தக் குற்றத்தைச் செய்யும் எந்தவொரு நபருக்கும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான எளிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 2013 ஆம் ஆண்டு வரை, இந்தக் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக ஒரு வருடம் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை அல்லது இரண்டும் இருக்கலாம். எவ்வாறாயினும், 2013 ஆம் ஆண்டின் சட்டம் 13 ஐ இயற்றியதன் மூலம், குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2013 , சிறைத்தண்டனை கட்டாயமாக்கப்பட்டது மற்றும் அபராதத்துடன் (தண்டனை வழங்கும் அதிகாரத்தின் விருப்பத்தின்படி) மாற்ற முடியாது. மேலும், சிறை தண்டனைக்கான அதிகபட்ச கால அளவு மாற்றப்பட்டு அதிகரிக்கப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 )

ஒரு பொது ஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்ய வரும் போது அப்படி கடமையாற்ற விடாமல் அவரை தாக்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது அப்படி கடமையாற்றுவதன் விளைவாகவோ அல்லது அப்படி கடமையாற்ற முயலும் போதோ அவரிடத்தில் வன்முறை தாக்குதல் அல்லது தாக்க முனைதல் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 67

எவரேனும் மின்னணு வடிவில் வெளியிடுவது அல்லது அனுப்புவது அல்லது வெளியிடுவது அல்லது பரப்புவது, காமத்தனமான அல்லது புத்திசாலித்தனமான ஆர்வத்தை ஈர்க்கும் எந்தவொரு பொருளையும் அல்லது அதன் விளைவு சாத்தியமான நபர்களை இழிவுபடுத்தும் மற்றும் ஊழல் செய்யக்கூடியதாக இருந்தால். சூழ்நிலையில், அதில் உள்ள அல்லது உள்ளடக்கப்பட்ட விஷயத்தைப் படிக்க, பார்க்க அல்லது கேட்க, முதல் குற்றத்தின் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதத்துடன் இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு தண்டனை வழங்கப்படலாம். இப்போது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சவுக்கு சங்கர் தனது வரம்பினை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக மிகப்பெரிய தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

இவருக்கு வழங்கப்படும் தண்டனை மூலம் மற்றவர்கள் நாவடக்கம், மற்றும் கட்டுப்பாடான சுதந்திரத்துடன் செயல்பட வழிவகுக்கும். இதேபோல் பத்திரிக்கை, ஊடகத் துறைகளில் உள்ள ஒழுங்கீனமாவர்களையும், மிரட்டல் பேர்வழிகளையும், ஊடகத்துறையை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் செய்யும் நபர்களையும் தயவுதாட்சண்யம் இன்றி தண்டிக்க தேவையான நவடிக்கைகளை போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!