/* */

அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1 கோடியே, 93 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
X
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரம் முதல் பருத்தி ஏலம் தொடங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு தருமபுரி,சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், பெருந்துறை,அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4 ஆயிரத்து 899 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், 1,820 குவிண்டால் பருத்தி குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.மேலும், கடந்த வாரத்தில் பருத்தி கிலோ 116 ரூபாய் ஏலம் போன நிலையில், நேற்று 111 ரூபாய் வரை ஏலம் போனதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 25 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  4. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  5. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  6. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  7. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  8. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?