குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
குமாரபாளையம் பாசம் அதரவற்றோர் மையம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
குமாரபாளையம் பாசம் அதரவற்றோர் மையம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திரனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
கோடை காலம் வந்தால் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்ப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எந்த அரசியல் கட்சியினரும் நீர் மோர் பந்தல் இதுவரை திறக்கவில்லை. தேர்தல் விதுமுறை ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் தாகம் தீர்க்க, குமாரபாளையம் பாசம் அதரவற்றோர் மையம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திரனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில், பாசம் மைய அமைப்பாளர் குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பாளர் பராசக்தி தலைமை வகித்தனர். நீர் மோர் பந்தல் திறப்பு விழா பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் நடந்தது.
அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி பங்கேற்று, நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா பங்கேற்று பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, அன்னாசி பழம், இளநீர் வழங்கினார். இதில் தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், பொதுநல ஆர்வலர் பன்னீர்செல்வம், உள்பட பலர் பங்கேற்றனர்.
கோடை வெப்பம் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு நீர்மோர் வாங்கி பருகினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu