/* */

பொய்யான சோதனைகள், வழக்குகள் மூலம் அதிமுகவை பயமுறுத்த வேண்டாம்:முன்னாள் அமைச்சர்

பொய்யான சோதனைகள், பொய்யான வழக்குகள் மூலம் அண்ணா திமுகவை பயமுறுத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்

HIGHLIGHTS

பொய்யான சோதனைகள், வழக்குகள் மூலம் அதிமுகவை பயமுறுத்த வேண்டாம்:முன்னாள் அமைச்சர்
X

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி .சீனிவாசன் கூறும்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்தில் சோதனைகள் செய்யப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது. இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை அடிபணிய வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

எடப்பாடி, ஓ பி எஸ் இருவரும் இன்று கூட்டாக அறிக்கை கொடுத்திருக்கிறார். அதிலே பொய்யான வழக்குகள் போடக்கூடாது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்தித்து நாங்கள் நிரபராதி என்று காட்டுவோம் என்று அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டாவது முறையாக இந்த சோதனை நடந்து இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்கள். கோவை மாவட்டத்தின் மக்களின் அன்பை பெற்றவராக இருப்பதினால் வழக்குப் போட்டு பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் பகல் கனவாக இருக்குமே தவிர நிச்சயமாக அவருக்கு எதிரான நடவடிக்கையாக இருக்க முடியாது.

தேர்தல் நடக்கும் முன்பே அவர் மீது பல புகார்கள் கொடுத்து குற்றவாளியைப் போல் காட்டினார்கள். அத்தனையும் மீறி கோவை மாவட்டத்தில் அதிகமான எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன் மூலம் 75 எம்எல்ஏக்கள் அண்ணா திமுக பெற்றிருக்கிறது. இந்த பலம் உள்ளாட்சி தேர்தலில் கூடுமே தவிர குறையாது. இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக நிறுத்த வேண்டும்.

இதுபோல் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனுடைய தீர்ப்புகள் வரும் பொழுதுதான் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். எனவே இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக நிறுத்திக் கொண்டால் அவர்கள் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும். இதுபோன்ற பொய்யான சோதனைகள், பொய்யான வழக்குகள் மூலம் அதிமுகவை பயமுறுத்த வேண்டாம் என்று கூறினார்.

Updated On: 11 Aug 2021 2:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க