/* */

விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதிகோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் கோவில் குளங்கள், வீதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா பேசியதாவது:

அனைத்து விழாக்களும் பிற மதத்தினர் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால் இந்து மத விழாவின் முக்கிய விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவுக்கு ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது இந்து மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதுகிறோம்.

கோவில்களை திறந்தால் தான் மக்கள் மனநிலை நன்றாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்தினால் மட்டும் தான் மதநல்லிணக்கம் வளரும். மாநில அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டங்கள் நடத்தும். தடையை மீறுவும் தயங்கமாட்டோம். இவ்வாறு பேசினார்.

Updated On: 6 Sep 2021 10:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!