/* */

ஊரடங்கு அமல்: பேருந்துகள் கிடைக்காமல் கொட்டும் பனியில் மக்கள் காத்திருப்பு

இரவு நேர ஊரடங்கு என்பது பொது மக்களின் இன்னல்களை ஆளாக்கியதாகவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

HIGHLIGHTS

ஊரடங்கு அமல்: பேருந்துகள் கிடைக்காமல் கொட்டும் பனியில் மக்கள் காத்திருப்பு
X

 திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம்,கடைவீதி,பழனி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பேருந்துகள் கிடைக்காமல் கொட்டும் பனியில் பொதுமக்கள் காத்திருக்க நேரிட்டது. வணிக நிறுவனங்களை ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் அடைக்க செய்தனர் .

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையான ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு உத்தரவு அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும் சரியாக ஒன்பது மணி அளவிலேயே வணிக நிறுவனங்கள் உணவகங்கள் என அனைத்து தரப்பினரும் கடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.

அதனை அடுத்து சரியாக 10 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வீணாவதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் திறந்து வைத்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கடையை அடைக்க செய்தனர்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் வருகை குறைந்தது. காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 900 போலீசார் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்திட தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம்,கடைவீதி,பழனி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து வாகனங்கள் மூலமாகவும் போலீசார் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் தாங்களாகவே 90 சதவீத அளவில் முன்வந்து கடைகளையும் வணிக நிறுவனங்களையும் மூடினர்.இதை அடுத்து தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.வழக்கம்போல் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள்,ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் பயண சீட்டு வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் ஊரடங்கு உத்தரவு முதல் நாள் என்பதால் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரைகளை மட்டுமே வழங்கி அனுப்பி வைத்தனர். நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாவட்டம் முழுவதும் அரசு அறிவித்த விதிமுறைகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது என்றாலும் ,

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்கு 10 மணி அளவில் செல்லக்கூடிய பேருந்துகள் முன்கூட்டியே சென்று விட்ட நிலையில் பிற இடங்களில் வேலைக்கு சென்று திரும்பியவர்கள் பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையத்திலேயே கொட்டும் பணியில் நின்ற வாரு ஆங்காங்கே பல இன்னல்களை அணிவித்தனர். இரவு நேர ஊரடங்கு என்பது பொது மக்களின் இன்னல்களை ஆளாக்கியதாகவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 6 Jan 2022 5:41 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்