/* */

ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

கும்பாபிஷேகத்திற்கு காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்ட அள்ளி ஊராட்சி, மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆகும்.

சுற்றியுள்ள ராமகொண்ட அள்ளி, புது நாகமரை, சோளப்பாடி உள்ளிட்ட 18 ஊருக்கு, தலைமை மாரியம்மனாக இந்த கோவில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு பிரச்சனை, வழக்கு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று பம்பை மேளதாளங்கள் முழங்க , வானவேடிக்கையுடன், காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மலையனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அழகாகவுண்டனூரில் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த யாக பூஜைகளை இருபதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, மலையனூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

Updated On: 9 Dec 2023 2:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...