/* */

தர்மபுரி மாவட்டத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
X

 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏழு வட்டங்களுக்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா, சிட்டாவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் பிரதி வாரம் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் நடைபெறுகிறது.

அதன்படி நடப்பு மற்றும் வரும் வாரத்தில் 7 வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் சிறப்பு முகாம்கள் வரும் 10, 12,17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தருமபுரி வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று- ஆண்டிஅள்ளி கிராம நிர்வாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று- கே.நடுஅள்ளி, கிராம நிர்வாக அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று - கொண்டம்பட்டி, கிராம நிர்வாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று - விருபாட்சிபுரம், கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்: சார் ஆட்சியர், தருமபுரி

நல்லம்பள்ளி வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று-நல்லம்பள்ளி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம்.

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று-டொக்குபோதனஅள்ளி, கிராம நிர்வாக அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று -நாகர்கூடல், கிராம சமுதாயகூடம்

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று -மாதேமங்கலம், கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், தருமபுரி.

பென்னாகரம் வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று-ரங்காபுரம், கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று-சிகரலஅள்ளி, கிராம நிருவாக அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று -சத்தியநாதபுரம், கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று -பருவதனஅள்ளி, கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்: உதவி ஆணையர் (ஆயம்), தருமபுரி


பாலக்கோடு வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று-அத்திமுட்லு, கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று-செல்லியம்பட்டி, கிராம நிருவாக அலுவலர் அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று -எர்ரனஅள்ளி, கிராம நிருவாக அலுவலகம்,

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று -பிக்கனஅள்ளி, கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்:தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), தருமபுரி

காரிமங்கலம் வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று-முக்குளம், கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று-காரிமங்கலம், கிராம நிருவாக அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று - கொங்கரப்பட்டி, கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று -பூனாத்தனஅள்ளி, கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தருமபுரி.

அரூர் வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று- கீழ்மொரப்பூர், கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று- சந்திராபுரம், கிராம நிருவாக அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று -பெரியபட்டி, கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று - எம்.வேளாம்பட்டி, கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்: வருவாய் கோட்டாட்சியர், அரூர்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்:

புதன்கிழமை 10.11.2021 அன்று- கொளகம்பட்டி, கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 12.11.2021 அன்று- பாப்பிரெட்டிப்பட்டி, கிராம நிருவாக அலுவலகம்

புதன்கிழமை 17.11.2021 அன்று - மொட்டாங்குறிச்சி, கிராம நிருவாக அலுவலகம்

வெள்ளிக்கிழமை 19.11.2021 அன்று -மணியம்பாடி, கிராம நிருவாக அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், நல அலுவலர், தருமபுரி.

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகான ஏதுவாக உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...