/* */

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
X

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நேரில் பார்வையிட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், தற்போது பொதுத் தேர்வுகள் இன்று ( 5 ஆம் தேதி) பிளஸ் 2 தேர்வு தொடங்கியது வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. 179 பள்ளிகளைச் சேர்ந்த 20,347 மாணவ மாணவிகள் 79 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

மொத்தம் மாணவர்கள் 10,151 பேரும், மாணவிகள் 10,196 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதில் 102 அரசு பள்ளிகளை சேர்ந்த 13,920 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் 6515, மாணவிகள் 7405 தேர்வு எழுதுகின்றனர்.

தலைமை கண்காணிப்பாளர் 79 பேர் கூடுதல் தலைமை கண்காணிப்பாளர் 4 பேர் தேர்வு அலுவலக அதிகாரிகள் 79 பேர் பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் 128 பேர் தேர்வறை கண்காணிப்பாளர்கள் 1280 உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டு தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தேர்வுகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றனர்.

Updated On: 5 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க