/* */

தொட்டில் குழந்தை திட்ட‌ மையம் - தருமபுரி நேரில் கலெக்டர் ஆய்வு

தருமபுரியில் தொட்டில் குழந்தை திட்ட‌ மையத்தை, கலெக்டர் திவ்யதர்சினி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தொட்டில் குழந்தை திட்ட‌ மையம் - தருமபுரி   நேரில் கலெக்டர் ஆய்வு
X

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்ட‌ மையத்தை, ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி  ஆய்வு செய்தார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சமூகநல துறை சார்பில் ரூ.48 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தில் தொட்டில் குழந்தை திட்ட‌ வரவேற்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொட்டில் குழந்தை திட்ட‌ மையத்தினை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்; பெயர் பலகைகளை அமைக்குமாறும், இந்தத் தொட்டில் குழந்தை திட்ட‌ மையத்தில் குழந்தையை விட்டுச் சென்றதும், தொட்டிலில் காணப்படும் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கும் வகையில், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்களும் அச்சிடப்பட்ட பலகை அமைக்குமாறும், குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகள் மற்றும் முட்புதர்களில் வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம். தொட்டில் குழந்தை திட்ட மையத்தில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், சிறப்பாகப் பராமரித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) நாகலட்சுமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, குழந்தைகள் பிரிவு தலைவர் மரு.ரமேஷ் பாபு, கண்காணிப்பு மருத்துவர் மரு.சிவக்குமார், மரு.பாலாஜி மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது