/* */

மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தருமபுரி கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில், முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தருமபுரி கலெக்டர் தகவல்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்,உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ஒரு லட்சம் ரூபாய், தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியன, ஒவ்வொரு நிதியாண்டிலும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த விருதுக்கு, முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்ப்பித்தல் வேண்டும். இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் , ஒரு நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது.

இதன்படி, 2020-2021 ஆண்டிற்கான, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும், தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது. விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல், 'முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், முதன்மை செயலர் ஃ உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு, 15.07.2021க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள்,ஆசிரியர்கள், விளையாட்டு புரவலர்கள், நன்கொடையாளர்கள், நடுவர்கள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 26 Jun 2021 4:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!