/* */

கடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கடலூரில்  கட்டுமான தொழிலாளர்கள் திடீர்  சாலை மறியல் போராட்டம்
X

கடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.கடலூர் லாரன்ஸ் சாலை நான்கு முனை சந்திப்பு அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.பொங்கல் தொகுப்புடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திடீரென கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

Updated On: 3 Dec 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!